நவராத்திரி ஸ்பெஷல் ‘ஸ்வீட் ரெசிபி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
navarathiri special sweet
navarathiri special sweet

இந்தியாவில் விசேஷமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் கடவுளுக்கு நெய் வேத்தியம் படைத்து வழிபடுவர். இதனால் வீட்டில் எதாவது இனிப்பு பதார்த்தங்களை செய்து வழிபடுவோம். அந்த வகையில் மூன்று பொருட்களை வைத்து சூப்பரான ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

நெய்

தேங்காய்

பால் – 2 கப்

சர்க்கரை

பாதாம்

முந்திரி

செய்முறை

முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அந்த துருவிய தேங்காயை தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் இந்த துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.

navarathiri special sweet
navarathiri special sweet

அடி பிடிக்காமல் வதக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து அதில் பாலை சேர்க்கவும். 15 நிமிடங்கள் தொடர்ந்து வதக்கி கொண்டே இருக்கவும். ஓரளவிற்கு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்கு உருகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இப்பொழுது ஓரளவிற்கு கெட்டி பதத்திற்கு வரும். தேங்காயும் நன்கு வெந்திருக்கும்.

navarathiri special sweet
navarathiri special sweet

இப்பொழுது முந்திரி மற்றும் பாதாமை பொடியாக நறுக்கி  நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு அதனை இறக்கி ஆறியதும் உருண்டைகளாக செய்து தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான நவராத்திரி ஸ்பெஷல் ஸ்வீட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here