
ராஜமவுலி இயக்கிய RRR படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
“நாட்டு நாட்டு ” பாடல்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து பிரம்மாண்டமாக படத்தை எடுப்பவர் தான் இயக்குனர் ராஜமவுலி. இவர் கடைசியாக எடுத்த RRR திரைப்படம் கடந்த வருடம் மார்ச் மாதம் 24ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்துக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதனை தொடர்ந்து RRR திரைப்படம் இரண்டு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு குத்து பாடல் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது, ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், சந்திரபோஸ் எழுதி, ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா பாடிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் 95 வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்த விருது என்று ரசிகர்கள் புகழாரம் பாடி வருகின்றனர். மேலும் ஆர்ஆர்ஆர் தொடர்ந்து அவார்டுகளை குவித்து வருகிறது என்று படக்குழுவினர் மகிழ்ச்சி மழையில் குளித்து வருகின்றனர்.