
இந்தியாவில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வந்த புதுச்சேரி மாநிலத்தில் முழுமையான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டுக்கு ரூ.11,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பட்ஜெட்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கேஸ் சிலிண்டர் ரூ.300 மானியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் மகளிர் மழலைகளை ஊக்குவிக்கும் விதமாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு நிதியாக தேசிய வங்கியில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., 27 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!
மேலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டமும் செயல்பட உள்ளது என பல்வேறு உன்னதமான நலத் திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.