#INDvsENG டி 20 தொடர் – நடராஜன் விளையாடுவதில் சிக்கல்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்ததாக டி 20 போட்டிகளை விளையாடவுள்ளது. இதில் இந்திய அணியில் நடராஜன் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடுகிறது. இதில் ஏற்கனவே டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டது. அதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையே டி 20 தொடர் நடைபெறவுள்ளது. 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் வருகிற வெள்ளிக்கிழமை முதல் துவங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்க்காத நிலையில் டி 20 தொடரில் நடராஜன் இடம் பிடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். தான் அறிமுகமான தொடர் மூலமே உலகின் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அந்த அளவிற்கு போட்டிகள் இவர் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடராஜன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இவருக்கு தோல் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தற்போது இவர் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி அகாடமியில் காயத்திற்கு சிகிச்சையும் மற்றும் உடற் தகுதியை மேற்கொள்ள பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் வருண் சக்கரவர்த்தி தோல்வி அடைந்தார். எனவே இவரும் தனது உடற் தகுதியை உறுதி படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். தற்போது இவருக்கு பதில் ராகுல் சாகர் அணியில் இடம் பிடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் நடராஜனின் உடல் குணமாகிவிடுமா என்று அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here