ஹரியானாவில் காணாமல் போன 29 000 லிட்டர் மதுபானங்கள் – எலிகள் மீது பழி சுமத்திய போலீசார்!!

0

ஹரியானா மாநிலத்தில் காவல் நிலையங்களில் வைத்திருந்த 29 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் காணாமல் போய் உள்ளது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் அதனை எலிகள் குடித்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளது கேலி கூத்தாக இருக்கிறது.

காணாமல் போன மதுபானங்கள்

ஹரியானா மாநிலத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில போலீசார் 30 ஆயிரம் லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள், 50 ஆயிரம் லிட்டர் நாட்டு மதுபானங்கள் மற்றும் 3000 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.  இவை அனைத்தையும் அவர்கள் 30 வெவ்வேறு காவல் நிலையங்களின் சேகரிப்பு கிடங்கான “மல்கானா” என்ற இடத்தில் வைத்துள்ளனர்.

தளபதி 66காக நச்சரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – முரண்டு பிடிக்கும் விஜய்!!

கூடுதலாக, இந்த மதுபானங்களை கடத்தியதற்காக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்க 25 காவல் நிலையங்களின் சேகரிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரம் மதுபானங்கள் மாயமாக மறைந்துள்ளது. இது குறித்து போலீசாரிடம் விசாரித்த போது அனைத்து மதுபானங்களையும் எலிகள் குடித்து விட்டதாக பதில் அளித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுபானங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டிரம்களில் மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதில் இருந்து எலிகள் குடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான். இப்படி இருக்க போலீசார் இவ்வாறு தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here