76 ஆண்டுகளான காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்த அதிசய சாமியார் உயிரிழப்பு..!

0

குஜராத் மாநிலத்தில் 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்துள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

பிரகலாத் ஜனி

குஜராத் மாநிலம் மோக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி. இவரை அப்பகுதியில் மாதாஜி என்று மரியாதையுடன் அழைத்து வந்தனர். 76 வயதான இவர் இது வரையிலும் உணவு தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் இவர் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்துள்ளார். எனவே உலகளவில் அவரது சீடர்களால் ‘சுவாச ஞானி’ என்று அழைக்கப்பட்டார்.

76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் ...

14 வயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன் என்ற கோயில் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்நிலையில், 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.மேலும் பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இவரிடம் வந்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here