ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மியான்மர் – ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிப்பு!!

0

மியான்மரில் தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல பதட்டமான செயல்கள் நடைபெற்று வருகிறது. தற்போது இதன் காரணமாக மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மியான்மர்:

தற்போது அனைத்து பகுதிகளிலும் அரசியலில் ஏற்படும் பல செயல்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது இதே போல் மியான்மர் பகுதியிலும் அரசியல் சூழ்நிலை காரணமாக அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ராணுவம் சந்தேகித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து தேர்தல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறி அந்நாட்டு ராணுவம் உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. இந்நிலையில் தற்போது அதிரடியாக ஆதிபர் வின் மைன்ட் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான ஆங் சான் சூச்சி போன்றோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட உள்ளது.

ஓராண்டுக்கு அவசர நிலை:

இந்நிலையில் அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய நகரங்களில் தொலை தொடர்பு சேவையை தடை செய்துள்ளனர்.

‘வாத்தி கம்மிங்’ வேற மாறி – விஜய், அனிருத்தை புகழுந்து தள்ளும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!!

மேலும் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். தேர்தலில் முறைகேடு நடந்த காரணத்தினால் இந்த அவசர நிலை அமல்படுத்தியுள்ளோம் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here