‘வாத்தி கம்மிங்’ வேற மாறி – விஜய், அனிருத்தை புகழுந்து தள்ளும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!!

0

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர்:

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகியுள்ளது. அனைத்து பாடல்களுக்கும் சினிமா ரசிகர்கள் தங்களது குத்தாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வண்ணத்தில் உள்ளது. மேலும் இந்த படம் வசூலிலும் தற்போது சாதனை படைத்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பாகவே மாஸ்டர் திரைப்படம் வசூலில் சுமார் ரூ.200 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்டர் திரைப்படம் இந்த வசூல் சாதனையை செய்தது ஆச்சர்யத்திற்குரியதே. இன்னும் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூலில் மாஸ்டர் திரைப்படம் புதிய வரலாற்று சாதனையை எட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டிக்கு திருமணமாகிவிட்டதா?? ரசிகரின் கேள்விக்கு சனம் அளித்த பதில்!!

தற்போது மாஸ்டர் திரைப்படம் குறித்து இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா சுற்றை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பிய அஸ்வின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடலை கேட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலை ஷேர் செய்து ‘வேற மாறி’ என்ற கேப்சனை இட்டுள்ளார். தற்போது இவர் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here