இருமல், சளியை விரட்டும் ‘நெஞ்செலும்பு சூப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

மழை காலம் வந்தாலே சின்ன பசங்கள இருந்து, பெரியவங்க வரை அவதி படுற ஒரே விஷயம் சளி, இருமல் தாங்க . மழையை தவிர்க்க முடியாது, ஆன சளிப் பிரச்சனையை ரொம்ப ஈசியா தவிர்கலாம். ரொம்ப ஈஸியான “மட்டன், மிளகு சூப் ” ஒரு முறை செய்ஞ்சு குடிச்சு பாருங்க, அப்புறம் சளியாவது, இருமலாவது. உங்க கிட்ட கூட வாராது… 10 நிமிசத்துல ரொம்ப ஈசியா செஞ்சுரலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் நெஞ்செலும்பு – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் -100 GM

தக்காளி -1

இஞ்சி,பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை -1 சிறிய துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் -2

மிளகு -2 டேபிள் ஸ்பூன்

சீரகம் -1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – 50 ml

கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை :

முதலில் மட்டன் நெஞ்செலும்பை கழுவி வைத்து கொள்ள வேண்டும். பின்பு சிறிது வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை சேர்த்து வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது நெஞ்செலும்பை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மல்லித்தழை இவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வைக்க வேண்டும். இப்போது சூடான, சுவையான சூப் தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here