ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் – வெற்றி பெறப்போவது யார்?? ட்விட்டரில் ட்ரெண்டிங்!!

0

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குகள் காலையில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்தல் முடிவுகள் சமூகவலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. #GHMCResults, #GHMCElectionresults, #HyderabadElection போன்ற கேஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

மாநகராட்சி தேர்தல்:

டிசம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. ஐதராபாத் மாநகராட்சியில் கிட்டத்தட்ட 150 வார்டுகள் உள்ளது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 150 இடங்களிலும், பாஜக 149 இடங்களிலும் காங்கிரஸ் 146 இடங்களிலும், தெலுங்கு தேசம் 10 மற்றும் ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி 51 இடங்களிலும் போட்டியிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் காலை முதலே பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்து வந்தது. தொடர்ந்து பா.ஜ முன்னிலையில் இருந்து வந்ததால் ஆட்சியினை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியாக இல்லாமல், காலையில் இருந்து சமூகவலைத்தளங்களில் வெற்றி அறிவிக்கும் முன்னரே தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்து வந்தனர்.

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!

ஆனால், சிறிது நேரத்திற்கு பின் நிலைமை தலைகீழாக மாறியது. டிஆர்எஸ்., கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. இதனை அடுத்து காலையில் சந்தோசமாக கொண்டாடிய பா.ஜ.க.,வினர் கப்சிப் என்று ஆகினர். இதனை கவனித்த நெட்டிசன்கள் பாரதிய ஜனதா கட்சியினரை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். #GHMCResults, #GHMCElectionresults, #HyderabadElection போன்ற கேஷ்டேக்கள் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here