யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!

0
murugan
யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத்:

தென்னிந்திய திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்பவர் தான் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அவர் இசையமைத்த சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. அதன் வரிசையில் புஷ்பா, வில்லு, வெடி போன்ற படங்கள் அடங்கும். மேலும் இவர் அடுத்தடுத்து படங்களில் இசையமைக்க இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை பூஜிதா பொன்னாடா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் சினிமா மட்டுமின்றி சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அண்மையில் நடிகை பூஜிதா பொன்னாடாவை தேவி ஸ்ரீ பிரசாத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை பொய்யானது என்று நடிகை பூஜிதா கூறியுள்ளார். மேலும் இது குறித்து நடிகை பூஜிதா கூறியதாவது, நான் யாரையும் விரும்பவும் இல்லை, திருமணம் செய்துகொள்ளவும் இல்லை என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்து முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here