நடப்பு சாம்பியனை வீழ்த்திய இளம் டென்னிஸ் புயல் – டேனியல் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!

0
நடப்பு சாம்பியனை வீழ்த்திய இளம் டென்னிஸ் புயல் - டேனியல் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!
நடப்பு சாம்பியனை வீழ்த்திய இளம் டென்னிஸ் புயல் - டேனியல் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!

நேற்று நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், நடப்பு சாம்பியனான டேனியல் மெத்வதேவை வீழ்த்தினார், இதனை தொடர்ந்து அமெரிக்க இளம் வீரர் கோகோ காஃப் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியன் தோல்வி!

மிகவும் புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், நடப்பு சாம்பியனான டேனியல் மெத்வதேவை  எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சற்று அசால்ட்டாக விளையாடிய மெத்வதேவ் 7-6, 13-11, 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் சால் தோற்கடிக்கப்பட்ட கிர்கியோஸ் தற்போது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 27-ம் நிலை வீரரான கச்சனோவ், 12 ஆம் நிலை வீரரான பாப்லோ கரெனோ புஸ்டாவை எதிர்கொண்டார்.

இவர்கள் இருவருக்கு இடையில் நடந்த கடுமையான போராட்டத்தில் கச்சனோவ் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து இரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற கச்சனோவ் மற்றும் நிக் கிர்கியோஸ் இருவரும் அடுத்ததாக காலிறுதி ஆட்டத்தில் மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here