சீரியல் நடிகருடன் நெருக்கமாக ரீலிஸ் செய்த ‘மௌனராகம் 2’ நடிகை – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் நடிகை ஏற்கனவே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இந்நிலையில் அவர் தற்போது ரீலிஸ் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மௌனராகம் நாயகி

மௌனராகம் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் சிறு குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டது. தற்போது பெரியவர்களாகி எப்படி ஒன்று சேர போகிறார்கள் என்பதே சீரியலின் மைய கதை. இந்நிலையில் தற்போது சக்தி மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். கார்த்திக்கிற்கு சக்தியை அடையாளம் தெரியவில்லை. மேலும் மல்லிகாவிற்கு சக்தி கார்த்திக் ஆபீஸில் தான் வேலை செய்கிறார் என்பதும் தெரியாது.

இந்நிலையில் தருணுடன் நெருங்கி பழகி வருகிறார் சக்தி. தருணுக்கு சக்தி மீது காதல் ஏற்படுகிறது. ஸ்ருதி வருணை காதலித்து வருகிறார். ஏற்கனவே ஸ்ருதிக்கு சக்தியை பார்த்தாலே பிடிக்காது. அப்படி இருக்க நடப்பதை வைத்து பார்க்கும்போது பெரிய சண்டையே நடக்க இருக்கிறது. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ரவீனா.

என்ன போஸ் இது அமலா பால், படுபயங்கரமா இருக்கே?? ஷாக்கான ரசிகர்கள்!!

இவர் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அந்த சீரியலில் நடிக்கும் வருண் என்பவருடன் இணைந்து நெருக்கமாக ரீலிஸ் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் கிண்டலடித்து வருகின்றனர். தருண் பின்னாடி சுத்திட்டு இப்படி வருண் கிட்ட நெருங்கி பழகுறீங்க என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

                                   அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here