பாக்கியலட்சுமி சீரியலில் களமிறங்கிய அடுத்த காதல் ஜோடி – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கட்டங்களோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் தற்போது எழில் தனது ஜோடியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

“பாக்கியலட்சுமி” சீரியல்

மக்கள் அனைவரும் தற்போது திரைப்படங்களை விரும்பி பார்ப்பதை விட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் ஒன்று தான் “பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் தற்போது பல சுவாரஸ்யமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஜோடியா விஜய் டிவிக்கு வந்துட்டீங்களா?? புதிய சீரியலில் களமிறங்கும் “திருமணம்” ஸ்ரேயா!!

அதே போல் இந்த சீரியலில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது எழில் தான். “பாக்கியலட்சுமி” சீரியலில் அனைவரும் பாக்கியாவை மட்டம் தட்டும் போது எழில் மட்டும் தான் அவர் மீது பாசமாக நடந்து கொள்வார். அதே போல் எழில் மற்றும் பாக்கியாவிற்கு இடையே உள்ள அழகான அம்மா – மகன் பாசம் எடுத்து கட்டப்பட்டு இருக்கும். இப்படியாக இருக்க, எழில் தனது ஜோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது ரீல் ஜோடியான ரித்திகாவுடன் இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்களது காதல் காட்சிகள் ஆரம்பமானால் நன்றாக இருக்கும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்புகின்றனர். இவர்கள் நிஜ ஜோடியாக மாறினாலும் நன்றாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here