“தங்க மீன்கள்” படத்தில் நடித்த குழந்தையா இது?? – எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களேன்!!

0

தமிழில் “தங்கமீன்கள்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த பேபி சாதனா தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குட்டி பெண் சாதனா

தமிழ் திரையுலகை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான் பின்னாளில் வெள்ளித்திரையில் பெரிய நடிகையாக உருவெடுப்பர். சிலர் தங்களது சிறு வயது நடிப்பிலேயே மக்களை தங்கள் பக்கம் இழுத்திருப்பர். அந்த வகையில் மக்கள் மத்தியில் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக ஈர்த்தவர் தான், பேபி சஹானா.

என்ன போஸ் இது அமலா பால், படுபயங்கரமா இருக்கே?? ஷாக்கான ரசிகர்கள்!!

இவர் முதன் முதலாக இயக்குனர் மற்றும் நடிகர் ராம் இயக்கத்தில் “தங்க மீன்கள்” திரைப்படத்தில் தான் நடித்தார். எப்போதுமே தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை குழந்தைகள் மிகவும் சமத்தாக, சுட்டித்தனமாக அதே சமயம் மிகவும் நன்றாக படிப்பது போலவே தான் காட்டுவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், “தங்க மீன்கள்” திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சஹானா சுமாராக படிக்கும் குழந்தையாவும், அப்பா செல்லத்தில் வளரும் குழந்தையாக இருந்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் இவர் மிகவும் பொருந்தி போய் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

இதனை அடுத்து இவர் நடிகர் மம்முட்டியுடன் “பேரன்பு” திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மக்கள் மத்தியில் பாராட்டுதலாக பேசப்பட்டது.

தற்போது பேபி சஹானா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here