என்ன போஸ் இது அமலா பால், படுபயங்கரமா இருக்கே?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தொடர்ந்து தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது விசித்திரமான முறையில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார்.

அமலா பால்

தமிழில் வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். தனது பள்ளி வயதிலேயே அவருக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததால் மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். அதனாலேயே அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

இந்நிலையில் அவருக்கு மலையாளத்தில் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகே தமிழில் சிந்து சமவெளி நடித்திருந்தார். முதல் படம் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான்.

மைனா படம் தான் திரையுலகில் அவருக்கு நல்ல அந்தஸ்தை பெற்று தந்தது. அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இளைய தளபதியுடன் தலைவா படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

அந்த படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது.

ஏ.எல்.விஜய் வேறு திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அமலா பால் அவரது நினைப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் சுகந்திரமாகவும் சுற்றி திரிந்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவரது மீரா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் பல வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார். தற்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here