இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் – சல்மான் கானை முந்திய ஹீரோயின்..!

0

உலக அளவில் இணையத்தில் அதிகம் தேடப்படும் பாலிவுட் பிரபலங்கள் குறித்த தகவலை எஸ்எம்இ ரஷ் என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் ஆண்களை பின்னுக்குத் தள்ளி பாலிவுட்டில் பிரபலமான பெண்களே முதலிடம் பிடித்து உள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள்:

அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள தரவுகளின்படி உலக அளவில் சராசரியாக பிரியங்கா சோப்ரா 39 லட்சம் முறை தேடப்பட்டு முதலிடம் பிடித்து உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சன்னி லியோன் 31 லட்சம் முறை தேடப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆக விளங்கும் சல்மான்கான் 21 லட்சம் முறை இணையத்தில் தேடப்பட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரினா கைப் 19 லட்சம் முறையும், ஹ்ரித்திக் ரோஷன் 13 லட்சம் முறையும் மற்றும் கிரிக்கெட் பிரபலம் விராட் கோஹ்லி 20 லட்சம் முறையும் இணையத்தில் தேடப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர ஷாருக்கான், அல்லு அர்ஜுன், ரோஹித் சர்மா மற்றும் விஜய் தேவர்கொண்டா உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here