சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்…, தொடரும் ஆல் ரவுண்டரின் சாதனை!!

0
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்..., தொடரும் ஆல் ரவுண்டரின் சாதனை!!
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்..., தொடரும் ஆல் ரவுண்டரின் சாதனை!!

பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம், அஸ்வின் சச்சின் சாதனை நெருக்க இருக்கிறார்.

அஸ்வின்:

இந்திய அணி இந்த மாதத்தில், பங்களாதேஷிற்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாடியது. இதில், ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்த போதிலும், டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரில், இவர், முதல் டெஸ்டில் 58 ரன்களும், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். 2வது டெஸ்டில், எழுச்சி கண்ட அஸ்வின், 6 விக்கெட்டுகளையும், 54 ரன்களையும் எடுத்திருந்தார். இதில், இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் முன் வரிசை வீரர்கள் வேகமாக விக்கெட்டை பறி கொடுக்க அஸ்வின், நிலைத்து நின்று 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 42* ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

T20 தொடருக்கான இந்திய அணி…, சீனியர் வீரர்களை கழட்டி விட திட்டமா??

இதனால், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இவர் சச்சின் சாதனையை நெருங்க ஒரு படி மட்டுமே உள்ளது. அதாவது, டெஸ்ட் அரங்கில், 18 முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் வென்று 2வது இடத்தை அஸ்வின் பெற்றுள்ளார். இவருக்கு முன் சச்சின் 19 விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here