துணிவு போட்டோவால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகர்.., இத அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!!

0
துணிவு போட்டோவால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகர்.., இத அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!!
துணிவு போட்டோவால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகர்.., இத அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக படக்குழுவினர் செய்து வருகின்றனர். இதுவரை படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் நேற்று கேங்ஸ்டர் என்ற பாடலை ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அப்டேட்டான படத்தின் டிரைலர் தேதி இந்த வார இறுதியில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் வெளியிடாத ஒரு புகைப்படத்தை கழுகு பட நடிகர் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காதலுனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!

அதாவது நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களால் எடிட் செய்தது கூட தெரியாமல் அஜித் படத்தை வெளியிட்டுள்ளார். அவர் பதிவிற்கு இது உண்மையான புகைப்படம் கூட தெரியாமல் எப்படி பதிவிட்டீர்கள், மேலும் சிலர் கடைசில மண்டைல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே கிருஷ்ணா என்று நக்கல் அடித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு புகைப்படத்தால் நெட்டிசன்களிடம் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார் நடிகர் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here