உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு – பிரதமர் மோடி வாழ்த்து!!

0

உத்தரகண்ட் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று பதவியேற்றார். உத்தரகண்ட் மாநில புதிய முதல்வருக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான ஆட்சியின் மீது பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மத்திய அரசுக்கு அதிருப்தி காணப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழல் இருப்பதாக பாஜக அரசு கருதியது. இந்த கருத்து தொடர்பாக உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சில மூத்த தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று திடீரென முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மௌரியாவிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய முதல்வரை நியமிப்பதற்கான பாஜக சட்டமன்ற ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக எம்பியான தீரத் சிங் ராவத் (56) என்பவர் உத்தரகண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

“வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய மகளிர் கிரிக்கெட் அணி – வைரலாகும் வீடியோ!!

இன்று மாலை 4 மணியளவில், தீரத் சிங் ராவத்தை மாநில முதல்வராக அறிவித்து ஆளுநர் ராணி மௌவுரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதுகுறித்து முதல்வர் தீரத் சிங்கிற்க்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உத்தரகண்ட் மாநில முதல்வராக பதவியேற்ற தீரத் சிங் ராவத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது தலைமையின் கீழான அரசு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் புதிய உயரங்களை தொடும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here