“வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய மகளிர் கிரிக்கெட் அணி – வைரலாகும் வீடியோ!!

0

நடிகர் விஜய் நடித்து மிகவும் பிரபலமான பாடல் தான், “வாத்தி கமிங் ஒத்து” இந்த பாடலுக்கு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் நடனமாடியதை அடுத்து தற்போது பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ளனர்.

வாத்தி கமிங் ஒத்து

நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைத்து நடித்த திரைப்படம் தான், மாஸ்டர். இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. தற்போது வரை இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் பாடல்கள் வேற லெவல் ஹிட் அடித்தது.

ஷகிலாவின் மகளுடன் அஷ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

குறிப்பாக, “வாத்தி கமிங் ஒத்து” பாடல் இன்று வரை அனைவரும் விரும்பி கேட்கும் ஒரு பாடலாக உள்ளது. இப்படியாக இருக்க இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார்,. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நடமாடி இருந்தனர். அந்த வீடியோ வைரலாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த அலையே ஓயாத நிலையில் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தற்போது இந்த பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. இந்த பாடலுக்கு வேதா கிருஷ்ணமூர்த்தி, திவ்யா,வனிதா ஆகான்ஷா உள்ளிட்டோர் ஆடியுள்ளனர்.

விடீயோவினை முழுவதுமாக பார்க்க கிளிக் செய்யவும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here