சுமதிக்கு நடக்கும் கொடுமையில் இருந்து காப்பாற்றும் கண்ணம்மா – அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மவிற்கு தனது ஹவுஸ் ஓனர் பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. மேலும் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. சிங்கபெண்ணாக மாறிய கண்ணம்மாவை சுமதியை காப்பாற்றியுள்ளார் கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாட்கள் பிரிந்திருந்த குடும்பம் தற்போது ஒன்று சேருவதற்கான நேரம் வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தன் குழந்தை என்றே தெரியாமல் லக்ஷ்மியை ஆதரித்து வருகிறார் பாரதி.

இந்த பக்கம் கண்ணம்மா ஹேமாவிடம் நெருங்கி பழகி வருகிறார். இதனிடையே எப்படியாவது பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விட மாட்டார்களா?? என்றும் தவித்து வருகிறார் சௌந்தர்யா. ஹேமாவும், லக்ஷ்மியும் ஒரே மேடையில் நடனமாட அதனை பார்த்து சௌந்தர்யா பூரித்து போகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வெண்பா கடுப்பாகவும் செய்கிறார். தற்போது இன்றைய எபிசோடில் கண்ணம்மா ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு எதார்த்தமாக வர சுமதி படும் கஷ்டத்தை கண்கூட பார்க்கிறார். ஏற்கனவே சுமதிக்கு உடம்பில் ஏற்படும் காயத்தை பற்றி சந்தேகிக்கும் கண்ணம்மா இன்று சேகர் தான் அனைத்திற்கும் காரணம் என்றும் கண்டுபிடிக்கிறார்.

தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. சுமதி வழக்கம் போல கிளம்பி ரெடியாகி வருகிறார். குடித்து விட்டு வரும் சேகர் யாரை மயக்க போற என்று கேட்க சுமதி இப்படி எல்லாம் பேசாதீங்க என்று கதறுகிறார். கோவமடையும் சேகர் சுத்தியல் எடுத்து அடிக்க செல்கிறார்.

“வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய மகளிர் கிரிக்கெட் அணி – வைரலாகும் வீடியோ!!

அப்பொழுது வரும் கண்ணம்மா அவரை தடுக்க இருவருக்கும் சண்டையாகிறது. சேகரை தள்ளிவிட்டு சுத்தலை கொண்டு அடிக்கிறார். பொண்ணுங்கனா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா என்று வெக்கங்கெட்டவனே, என்று கண்டபடி பேசுகிறார். சுமதி கண்ணம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here