கலெக்டர் தந்த ‘வலிமை’ அப்டேட் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தேர்தல் விழிப்புணர்வுக்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், வலிமை அப்டேட் என குறிப்பிட்டு ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வலிமை அப்டேட்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இரண்டு வருடங்களுக்கு பின்பாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான வேலைகள் எல்லாம் ரகசியமாக நடந்து வந்த நிலையில், அஜித்தின் ரசிகர்கள் வலைதளங்களிலும், பொது இடங்களிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், விளையாட்டு மைதானங்களிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – மார்ச் 15 வரை மாநிலங்களை ஒத்திவைப்பு!!

இதையொட்டி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த விளம்பரம் ஒன்றை பதிவு செய்து, ‘வலிமை அப்டேட் மக்களே’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here