கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மோடியின் தாயார்- வைரலாகும் ட்வீட்!!

0

நாட்டின் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று கொரோனாவிற்கான முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதனை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கடந்த 1ம் தேதி முதல் இந்தியாவில் அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பிற நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் முதல் நாளில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இவரை தொடர்ந்து பல அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் குடியரசு தலைவர் என அனைவரும் வரிசையாக தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வரை இந்தியாவில் மொத்தம் 2,52,89,693 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கொரோனவிற்கான தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளார். இதனை மோடி தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 118 செலவின பார்வையாளர்கள் நியமனம் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

இதுகுறித்து மோடி கூறியதாவது, ‘என் அம்மா கொரோனாவிற்கு முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துள்ளார். இதனை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் உங்கள் அருகில் இருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியுடையவர்களை நீங்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here