தமிழக சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்!!

0

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது தனது கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது திமுக கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி நடக்கவிருக்கும் தேர்தலில் கமல் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார். இவரை போல் சிங்காநல்லூர் தொகுதியில் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

திமுகவுடன் தேமுதிக கூட்டணி?? – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!

மேலும் மயிலாப்பூரில் ஸ்ரீப்ரியா, தி.நகரில் பல.கருப்பையா, சென்னை ஆலந்தூரில் நடிகர் ஆனந்த் பாபு, மேலும் எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து தாசப்பராஜ் போட்டியிடுகின்றனர். மேலும் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சுபா சார்லஸ் போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here