Thursday, May 2, 2024

ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு செலவினை திமுக முழுமையாக ஏற்கும் – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலின் தற்போது அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் “நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் களம்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து அதிரடியான பணிகளிலும் தமிழக்தில் உள்ள கட்சிகள் இறங்கியுள்ளன. இந்த முறை தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பல தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதற்காக அதிரடியான அறிவிப்புகளை தி.மு.க கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். தற்போது ஒரு அதிரடியான அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, “தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் “நீட்” தேர்வுகள் காரணமாக பல மாணவர்கள் தற்கொலைகளை செய்து கொண்டனர். மாணவர்கள் பலரும் தங்களது மருத்துவராகும் கனவுகளை தொலைத்து உள்ளனர். இதனால் தான் “நீட்” தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் “நீட்” தேர்வுகள் ரத்து செய்யப்படும்”

கட்சி ஏற்றுக்கொள்ளும்:

“தமிழகத்தில் தற்போது ஆட்சியினை நடத்தி வரும் அ.தி.மு.க யாருக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்ன என்ற போக்கில் தான் ஆட்சியினை நடத்தி வருகின்றனர். அவர்களது கல்லா நிரம்பினால் போதும் என்ற எண்ணத்துடன் தான் இருந்து வருகின்றனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 7.5 சதவீத ஒதுக்கீடு காரணமாக அரசு மருத்துவக்கல்லூரியில் 227 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் அனைத்தும் தனியார் கல்லூரிகளில் தான் ஒதுக்கப்பட்டுள்ளன”

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“இதனால் “நீட்” தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றும் அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களது துயரினை துடைக்க வேண்டி ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தி.மு.க கட்சி ஏற்றுக்கொள்ளும். அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, கிராமப்புற, ஏழை, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்” இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -