‘மிஷன் பெங்கால்’ – பாஜக.,வில் இணைந்த 9 எம்எல்ஏ.,க்கள்!! மம்தா பானர்ஜி ஷாக்!!

0

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த முக்கிய பதவியில் உள்ள சிலர் திடீரென பா.ஜ.க வில் இணைந்துள்ளனர். இன்று மேற்கு வங்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா முழுவதும் தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க வின் முக்கிய குறிக்கோள். இதற்காக ஒவ்வொரு மாநில தேர்தலிலும் முழுபலத்தை காட்டி மக்களையும், மற்ற கட்சியினரையும் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அந்த வகையில் பீகாரில் அடைந்த வெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கத்திற்கு தனது அடுத்த குறியை வைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. மம்தாவின் அரசு மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் பா.ஜ.க “மிஷன் பெங்கால்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயலாக்குவதற்கு கட்சி பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தலைமையில் 11 பேர் கொண்ட குழு செயல்படுகிறது.

30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் திடீரென கட்சியின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வெளியேறுகின்றனர். இந்நிலையில் இடதுசாரி கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ க்கள் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ க்கள் கொல்கத்தாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்பி.,க்கள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பாஜக.,வில் இணைந்துள்ளனர். ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த நிகழ்வு மிகப் பெரும் பின்னடைவாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here