30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0

உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு அனைத்து மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, உள்நாட்டு உற்பத்தியில் கொரோனா தடுப்பூசி கண்டறிவதற்கு மருத்துவ குழுக்கள் மற்றும் விஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியா தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. இந்தியாவில் 95.46 சதவீதமாக குணமடைந்தோரின் சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21% ஆக அதிகரிப்பு!!

மேலும் இந்த கொரோனா போரில் நம் முன் நின்று வழிநடத்திய இந்தியா பிரதமர் மோடி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தடுப்பு மருந்து உருவாகும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அனைத்து சூழ்நிலைகளையும் விசாரித்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here