காவலர்கள் வீட்டிற்கு பால் சப்ளை கிடையாது – தமிழ்நாடு பால் முகர்வோர் சங்கம் அறிவிப்பு..!

0
Milk Supply

தமிழகத்தில் போலீஸ்காரர்கள் வீட்டிற்கு நாளை முதல் பால் சப்ளை செய்யப்படாது என பால் முகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்து உள்ளது.

பால் சப்ளை கிடையாது:

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக சேவைகளுக்கு தடைகள் இல்லை என அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களை போலீசார் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பால் முகர்வோர் சங்க தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், பால் ஒரு அத்தியாவசிய பொருள் என்பதால், அதன் விற்பனையில் எவ்வித தடையும் இருக்கக் கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தின் பல நகரங்களில் பால் முகர்வோர்களை போலீசார் விற்பனை செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

TN Police
TN Police

ராபின்சிங் காரைப் பறிமுதல் செய்த போலீசார் – அவர் கிரிக்கெட் வீரர்னு தெரியல சார்..!

மேலும் பால் டெலிவரி செய்யும் ஏஜென்டுகளை போலீசார் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து உள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார். எனவே நாளை முதல், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் நாள் வரை, போலீசார் வீட்டிற்கு பால் சப்ளை செய்யப்படாது என அவர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கோவில்பட்டியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் அதிகார மற்றும் வன்முறை நடவடிக்கையை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here