ராபின்சிங் காரைப் பறிமுதல் செய்த போலீசார் – அவர் கிரிக்கெட் வீரர்னு தெரியல சார்..!

0

ஊரடங்கு உத்தரவை மீறி சென்னையில் காய்கறி வாங்க காரில் சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராபின்சிங் கார் பறிமுதல்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உட்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங் காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்க காரில் வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் காரை வழிமறித்துள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பின்னர் காரை ஓட்டுபவர் யார் என்று தெரியாமல் எங்கு செல்கிறீர்கள் இ-பாஸ் இருக்க என்று விசாரித்துள்ளார். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக உங்களின் காரை பறிமுதல் செய்கிறோம். மேலும் அபராதமும் விதிக்கிறோம் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

உடனே கிரிக்கெட் வீரர் ராபின்சிங், தனக்குத் தெரிந்த ஒருவருக்கு போன் செய்து காரில் வரும்படி கூறியுள்ளார். அவர் வந்ததும் அந்தக் காரில் ஏறி ராபின்சிங் சென்றுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீஸார் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

ஜென்டில்மேனாகா நடந்துகொண்டார் ராபின்சிங்..!

இது குறித்து போலீசார் கூறுகையில், கிரிக்கெட் வீரர் ராபின்சிங் என அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கு முதலில் தெரியவில்லை. அவரும் தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஜென்டில்மேனாகவே நடந்துகொண்ட கிரிக்கெட் வீரர் ராபின்சிங். அதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கே காரை ஓட்டி வந்துள்ளார். விசாரணைக்குப் பிறகுதான் அவர் கிரிக்கெட் வீரர் என்ற தகவல் எங்களுக்கு தெரிந்தது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here