Saturday, April 27, 2024

டிச.,13 & 14 தேதிகளில் எரிகற்கள் மழையாக பொழியும் – வானிலை நிபுணர்கள் தகவல்!!

Must Read

எரிகற்கள் வானிலிருந்து விழும் நிகழ்வு டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறப் போவதாக வானிலை நிபுணர் பாட்ரிசியா கூறுகிறார். இவ்வாறு வானிலிருந்து எரிகற்கள் விழும் நிகழ்வை நம் கண்களால் பார்க்கமுடியும். வானில் இருந்து எரிகற்கள் மழையாய் பொழியும் நிகழ்வை அனைத்து நாட்டிலும் காணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிக்கற்கள் விழும் நிகழ்வு:

நாம் அனைவரும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் போது அறிவியல் பாடப்புத்தகத்தில் விண்கற்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவற்றை பற்றி படித்திருக்கிறோம். அவற்றை சில நாடுகளில் பார்த்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப்போகும் தருவாயில் விண்ணில் நிறைய அதிசயங்கள் நிகழப்போவதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தே விண்ணில் நேரடியாக பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் நிகழ இருக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முழுசூரியகிரகணம், வியாழன்-சனி கோள்கள் ஒன்றாக இணைவது போன்று மேலும் ஒரு அதிசயம் நம்மை ஆச்சரியப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த மாதங்களில் விண்ணிலிருந்து விழும் விண்கற்களை பார்த்திருப்பீர்கள். இந்தமாதமும் விண்ணில் இருந்து எரிக்கற்கள் விழுகின்றன.

பிரிட்டன் ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் மையத்தில் உள்ள வானிலை நிபுணர் பாட்ரிசியா ஸ்கெல்ட்டன், “வால் நட்சத்திரங்கள் விட்டுச் செல்லும் தூசிமண்டலத்தின் வழியாக பூமி செல்லும் போது எரிகற்கள் பொழியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது”, அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் நமது பூமி இந்த கைவிடப்பட்ட தூசிகளின் வழியே பயணிக்கும்போது, இரவு நேரத்தில் ஒளிமயமான காட்சிகள் ஏற்படுகின்றன.

இரவில் கடந்து போகும் வெளிச்ச கீற்று:

“ஜெமின்டிஸ் எரிநட்சத்திர பொழிவு வித்தியாசமானது – 3200 பேட்டன் என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மண்டலமாக இது இருக்கிறது”. இதில், எரிநட்சத்திரங்கள் ஒரு விநாடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்”. இந்த நிகழ்வின் போது மஞ்சள் நிறமும் சில நேரங்களில் பச்சை அல்லது நீல நிறமாகவும் எரிக்கற்கள் இருக்கும். இது இரவு நேரத்தில் வானில் பெரிய வெளிச்சக் கீற்று கடந்து போவது போல் தோன்றும்.

Work From Home முடிவிற்கு வருகிறது – மாநில அரசு அறிவிப்பு!!

“எரிநட்சத்திரங்கள் பறந்த நிலையில் எரிந்து விழும்போது எல்லா திசைகளிலும் இந்தக் காட்சி தோன்றும்” அதனால் எல்லா திசைகளிலும் இந்த எரிக்கற்களை காணமுடியும் என்று அவர் குறிப்பிட்டார். அம்மாவாசை போல் இருட்டாக இருந்தால், இந்த அழகிய காட்சியை அருமையாகத் தெரியும், ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்ப்புறங்களில் இந்தக் காட்சி ஓரளவுக்கு தான் தெரியும். கடந்த ஆண்டு வந்த இந்த எரிக்கற்கள் பவுர்ணமியில் வந்தன. ஆனால், இந்த வருடம் விழும் எரிக்கற்கள் அமாவாசையில் வருவதால் காட்சி நன்றாகத் தெரியும். டிசம்பர் 1 முதல் 14 தேதி வரை அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 150 எரிநட்சத்திரங்கள் வீழும் என கூறப்படுகிறது. இந்நிகழ்வு பார்பதற்கு விண்ணில் வால்நட்சத்திரம் வருவது போல் தெரியும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -