Friday, April 19, 2024

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் – “அண்ணாத்த” அப்டேட் வீடியோ வெளியீடு!!

Must Read

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் அன்று ரஜினியின் அடுத்த ‘அண்ணாத்த’ படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார், அப்படத்தின் இயக்குனர் ‘சிறுத்தை சிவா’.

ரஜினி பிறந்தநாள்:

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்ப நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்கென தனி ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளன. சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கான தேதியை அறிவித்தார். அதை தொடர்ந்து அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்த ரஜினியின் அரசியல் பயணம் குறித்த தகவல், அதனையும் ரஜினி டிசம்பர் 13-ம் தேதி வெளியிட்டார். அதில் ஜனவரியில் புதிதாக கட்சி தொடங்க போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-தேதி அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு பக்கம் அரசியல் குறித்து தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சினிமாவிலும் சிறப்பாக உள்ளார்.இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான “அண்ணாத்த” படத்தை பற்றிய அப்டேட்யை அந்த படத்தின் இயக்குனர் ‘சிறுத்தை சிவா’ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ வெளியீடு:

இயக்குனர் சிவா அஜித் நடித்த விசுவாசம் படத்தை இயக்கியவர். விசுவாசம் படத்தின் வெற்றியின் காரணமாக இயக்குனர் சிவாவிற்கு தன் அடுத்த பட வாய்ப்பை கொடுத்தார் நடிகர் ரஜினி. ரஜினியின் 168 வது படமான ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். இந்த படடஹி சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

மேலும் இப்படத்திற்க்கான ஷூட்டிங் வருகிற 15-ம் தேதி தொடங்கவுள்ளதாக சன் பிகிடுறேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -