பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல் தேவையில்லை – ஆசிரியர்கள் கண்டனம்!!

0

இனி பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல் போன்ற பாடங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர். தற்போது இதற்கு ஆசிரியர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பொறியியல்:

பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களை கல்வித்தகுதியாக வைத்திருந்தால் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர முடியும். ஆனால் தற்போது அதற்கான கல்வி தகுதியை இந்திய தொழிநுட்ப கவுன்சில் மாற்றியுள்ளது. இதனை இந்த ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த விவர குறிப்பேட்டில் தெரிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் படி தெரிவித்ததாவது, கணிதம் மற்றும் இயற்பியல் தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இணைப்பு படிப்பு ஒன்றை பல்கலைக்கழகங்கள் நடத்தும். மேலும் 12ம் வகுப்பில் மாணவர்கள் 45 சதவீதம் எடுத்திருந்தால் போதும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

போர்களை விட கொரோனாவால் தான் அதிக பலி – ஜோ பைடன் வருத்தம்!!

அதுமட்டுமல்லாமல் பட்டியல் இன மாணவர்கள் 40 சதவீதம் எடுத்திருந்தால் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கணித ஆசிரியர்கள் கூறுகையில் Data science, artificial intelligence and machine learning போன்ற படிப்புகளுக்கு கணித அறிவு கட்டாயமாக தேவைப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here