போர்களை விட கொரோனாவால் தான் அதிக பலி – ஜோ பைடன் வருத்தம்!!

0

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதுகுறித்து ஜோ பைடன் தொலைக்காட்சி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஜோ பைடேன்:

கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் உயிரை பறித்து வந்தது. இதில் அதிக பாதிப்பு ஏற்பட்டது அமெரிக்க நாட்டில் தான். அந்த நாட்டில் தான் லட்சக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போது இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முறையாக தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நாம் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோம். நாம் அதனை தடுத்து நிறுத்தாத விளைவு தான் தற்போது அது நம்மை அழித்து வருகிறது. மேலும் நாம் 2019ம் ஆண்டு நமது குடும்பங்களுடன் எடுத்த புகைப்படம் அனைத்தும் தற்போது நினைவுகளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு அனைவருக்கும் பெரும் வருத்தமான ஆண்டாக அமைந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்!!

மேலும் கடந்த ஆண்டு பலியான ஆண்டாக திகழ்ந்தது. அமெரிக்க எப்போதும் இருட்டில் ஒளியைத்தேடும் உத்வேகத்தை கொண்டது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் சுமார் 5,27,726 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போர் மற்றும் பயங்கிரவாதிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட கொரோனவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தான் அதிகம் என்று ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here