17 வருடத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் சிம்பு திரைப்படம் – குஷியில் ரசிகர்கள்!!

0

சுமார் 17 வருடங்களுக்கு பின்பு சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தற்போது மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மன்மதன்:

கடந்த 2004ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் உருவான படம் தான் மன்மதன். இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். மேலும் இதில் சிம்பு முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு மிக பெரிய பாராட்டை பெற்றது. மேலும் இதனை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது சுமார் 17 வருடங்களுக்கு பின்பு இந்த திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாம்.

சௌந்தர்யாவிற்கு உடலில் இருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா பாரதி?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) தரத்தில் உருவாக்கி திரையரங்குகளில் வெளியிடவுள்ளார்களாம். இதனை நந்தினி தேவி பிலிம்ஸ் சுமார் தமிழகம் முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடவுள்ளதாம். தற்போது இந்த தகவலினால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here