மாஸ்டர் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜயின் மாஸ்டர் பட ரிலீஸ் தேதி முடிவாகி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம்

பிகில் படத்திற்கு பிறகு மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீசாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக தொடர்ந்து தள்ளி போய்கொண்டே இருந்தது. ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்ற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

master
master

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களில் படங்களை திரையிடலாம் என்று தமிழக அரசு கூறியதை தொடர்ந்து மாஸ்டர் பட ரிலீஸ் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விஜய் நேற்று சந்தித்தது பேசினார்.தற்போது அனுமதிக்கப்பட்ட 50% பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100% ஆக உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உட்பட மேலும் சில படக்குழுவினரும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்குப்பின், மாஸ்டர் படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here