முத்தையா முரளிதரனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின் – குவியும் பாராட்டுக்கள்!!

0

இந்தியா அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளராக திகழ்பவர் ரவிச்சந்திர அஸ்வின். தனது சுழற் பந்து வீச்சினால் எதிரணி பேட்மேன்களை திணறடிப்பர். தற்போது இவர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஜாம்பவானாக முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டி:

தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் இந்தியா அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சளராக திகழ்ந்து வருகிறார். தனது பார்மை இழந்த நிலையில் இருந்த இவர் சமீபகாலமாக மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து இவரை ஒதுக்க பட்ட நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் தனது சுழற் பந்தினால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சான்றாக தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்மித்தை தனது சுழற் பந்தினால் அலற வைத்து வருகிறார். இலங்கை அணியின் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதில் ஒன்று தான் டெஸ்ட் போட்டிகளில் இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை 191 முறை கைப்பற்றியுள்ளார்.

இதனை தற்போது இந்தியா அணியின் அஸ்வின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி இவர் விளையாடிய 73 டெஸ்ட் போட்டிகளில் 192 முறை இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 375 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here