மாஸாக வெளியான மாஸ்டர் திரைப்படம் – உற்சாகத்தில் தனிமனித இடைவெளியை மறந்த ரசிகர்கள்!!

0
master

ஒரு வருட காத்திருப்புக்கு பின் இன்று திரையரங்குகளில் வெளியானது மாஸ்டர் திரைப்படம். படத்தை காண வேண்டும் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் தனிமனித இடைவெளியை மறந்தனர். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.

திரையரங்குகளில் மாஸ்டர்

மாநகரம் மற்றும் கைதி பட இயக்குனரின் மூன்றாவது படைப்பாக மாஸ்டர் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 64 வது படம் மாஸ்டர். விஜயுடன் இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், ரம்யா, அர்ஜுன்தாஸ், சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இப்படத்தின் வெளியீடு கடந்த ஏப்ரல் மாதம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் இப்படத்தின் வெளியீடு தாமதமாகிகொண்டிருந்தது. ஊரடங்கில் பல புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் மாஸ்டர் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்.

தற்போது மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாஸ்டர் படத்தின் முதல் காட்சி இன்று திரையிடப்பட்டது. படத்தை காண வேண்டும் என்ற உற்சாகத்தினால் முகவசம் அணியாமல் வந்திருந்தனர். தனிநபர் இடைவெளி என்பது திரையரங்குகளில் இல்லாமல் போனது. திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் தர்மபுரியில் ஒரு திரையரங்கில் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here