உங்க ராசிப்படி உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?? அப்போ இத படிங்க!!

0
marriage
marriage

அழகான, அன்பான மனைவி யோகம் ஒரு சிலருக்கே கிடைக்கும். அழகான மனைவி கிடைக்கும்போது அதை ரசிக்கும் கணவர் அமைய மாட்டார். அழகை ரசிக்கும் கணவருக்கு அழகான மனைவி அமையாது. இப்படி இருக்க அன்பான, அழகான மனைவி அமைவது சில யோகங்களில் மட்டுமே. எந்த ராசியினருக்கு எப்படி பட்ட மனைவி அமைவர் என்று பார்ப்போம்.

அழகான மனைவி

பொதுவாக ஒரு ஜாதகரின் சுக்கிர நிலையை வைத்தே அவரின் மனைவி அமையும் விதத்தை கூற முடியும். ஒவ்வொரு ராசிக்கட்டத்தில் எந்த இடத்தில் சுக்ரன் நிற்கின்றாரோ அந்த பலனை பொறுத்தே அவருக்கு மனைவி அமைகின்றாள். உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கீழ் கொடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து சுக்ரன் உங்கள் ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்துள்ளார் என்பதை தெரிந்துகொண்டு இந்த பதிவை படிக்கவும்.

jathaga kattam
jathaga kattam

மேஷம் – மேஷத்தில் சுக்கிரன் அமையும் போது இளமையான, சுறுசுறுப்பான மனைவி அமைவாள். கணவனுடன் இருப்பதையே விரும்புவாள். தனது தாய் வீட்டிற்கு செல்வதை கூட விரும்ப மாட்டாள். சற்று கோவம் அதிகமாக வரும்.

ரிஷபம் – ரிஷபத்தில் சுக்ரன் அமர்ந்தால் அழகான மனைவி அமைவாள். ஆடம்பரத்தை விரும்பும் மனைவி அமைவாள். ஆடை அணிகலன்களை அதிகம் விருப்பம் உள்ளவளாக இருப்பாள்.

husband and wife
husband and wife

மிதுனம் – மிதுனத்தில் சுக்ரன் நின்றால் புத்திசாலியான மனைவி அமைவாள். சுறுசுறுப்பாகவும் எதையும் எளிதாக புரிந்துகொள்ளும் மனைவியாக இருப்பார்.

கடகம் – கடகத்தில் சுக்ரன் நின்றால், அன்பான பெண் மனைவியாக அமைவாள். பாசத்திற்கு அடிமையாக இருப்பாள். எதையும் சகித்துக்கொள்ளும் பெண்ணாக இருப்பாள்.

சிம்மம் – சிம்மத்தில் சுக்ரன் நின்றால் வேளைக்கு போகும் பெண்ணாக இருப்பார். எதையும் எதிர்கொள்ளும் துணிவான பெண்ணாக இருப்பாள்.

husbandwife
husbandwife

கன்னி – கன்னியில் சுக்ரன் நின்றால் அலங்காரம் செய்து கொள்வதில் அதிக விருப்பம் உள்ளவளாக இருப்பாள். ஜாதகரை விட வயதில் மூத்தவளாக இருப்பாள்.

துலாம் – துலாமில் சுக்ரன் நின்றால் புத்திசாலியான மனைவி அமைவாள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனைவி அமைவாள். அறைந்து முடிவெடுக்கும் தன்மை இருக்கும்.

விருச்சிகம் – உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் மனைவி இருப்பாள். நெருங்கிய சொந்தமாக இருப்பாள்.

தனுசு – அன்பான, நன்கு படித்த மனைவி அமைவாள். ஆனால் பார்க்க வயதில் மூத்தவளை போல காட்சியளிப்பாள். சில நேரங்களில் வயதில் மூத்தவளாக கூட அமையலாம்.

husbandwife
husbandwife

மகரம் – மனைவி உடல் உழைப்பாளியாக இருப்பாள். எதையும் கருத்தோடு செய்யும் பங்கு இருக்கும்.

கும்பம் – கும்பத்தில் சுக்ரன் நின்றால் மனைவி பிடிவாத காரியாக அமைவாள். அதிகாரம் செய்யும் மனைவியாக அமைவாள்.

மீனம் – சுக்ரன் மீனத்தில் அமர்ந்தாள் மனதிற்கு பிடித்த மனைவி அமைவாள். சாந்த குணம் கொண்டவளாக இருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here