உடல் சூட்டை குறைக்க வேண்டுமா?? – அருமையான டிப்ஸ் இதோ!!

0
body heat
body heat

ஒருவருக்கு உடல் சூடு அதிகம் இருப்பதால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. மூலம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடலில் சூடு அதிகரித்தாலும் பிரச்சனை தான். குறைந்தாலும் பிரச்சனை தான். எப்பொழுதும் சமமான அளவில் உடல் வெப்பநிலை இருக்க வேண்டும். உடல் சூட்டை குறைக்க டிப்ஸ் இதோ உங்களுக்காக…

உடல் சூடு

உடல் சூடு ஓரளவுக்கு மேல் அதிகரிப்பதால் முடி உதிருதல், சரும பிரச்சனைகள், உள் மூலம், வெளி மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

body heat
body heat

பெரும்பாலும் வாகன ஓட்டுனர்கள், உட்கார்ந்து பணிபுரிபவர்கள், அதிக நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் ஆகியவர்களுக்கே உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன.

உடல் சூடு குறைய

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி அதில் வெந்தயத்தை 20 நிமிடம் ஊற வைத்து அதனை உலர்த்தி நன்கு காய்ந்ததும் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

body heat
body heat

மேலும் கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு சேர்த்து இறக்கி ஆறியதும் அந்த எண்ணெய்யை கட்டை விரலில் வைக்கவும். 2 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து மன அழுத்தமும் ஏற்படாமல் இருக்கும்.இரவில் தூங்கும் முன் தொப்புளில் நல்லெண்ணெய்யை விட்டு தூங்க வேண்டும்.

oil bath
oil bath

தினமும் காலையில் பால் குடித்து வரலாம். சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் நீச்சதண்ணீர் குடித்தால் உடல் சூடு குறையும். வெள்ளரிக்காய், தர்பூசணி, போன்றவற்றை சாப்பிட்டாலும் சூடு குறையும். நீர்மோர், பழைய சாதம், கஞ்சி போன்றவற்றை குடித்தாலும் குடித்தால் உடல் சூடு குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here