மொய்பணம் ‘கூகுள் பே’ & ‘போன் பே’யில் – கலக்கும் புதுமண தம்பதியின் ஐடியா!!

0
g pay

மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் மொய் செலுத்துவதற்கு வசதியாக கூகுள் பே மற்றும் போன் பேயில் பணம் செலுத்திய சம்பவம் தொடர்பான புதுமண தம்பதியின் வித்தியாசமான ஐடியா தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

கூகுள் பேயில் மொய்பணம்

நாள் பார்த்து சடங்குகள் செய்து பெற்றோர்களால் அனைவரின் ஆசீவாதத்தோடு நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம். தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மொய்பணம் வைப்பது வழக்கம். இது கொரோனா காலம் என்பதால் திருமணங்கள் பலவும் பல்வேறு விதமாக நடத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மொய்பணம் வசூலிப்பது தொடர்பாக மதுரையில் ஒரு திருமணத்தில் நடந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் வசித்துவரும் ஜெயந்தி மற்றும் ஜெகதீஸ்வரன் தம்பதியினரின் மகள் சிவசங்கரிக்கும் மதுரை மாவட்டம் பாலரெங்காபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- சாந்தி ஆகியோரின் மகன் சரவணனுக்கும் கடந்த ஞாயிற்று கிழமை திருமணம் நடைபெற்றது.

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

கொரோனா பரவலிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு வழிமுறைகளை முன்னிருத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது நடத்தப்பட்டு வரும் திருமணங்கள் அதிக அளவு கூட்டம் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உறவினர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவோ மொய்பணம் செலுத்துவது கூடாமல் போகிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற இத்திருமணம் மொய்பணம் வழங்குவதற்கு புது ஐடியாவை கொடுத்துள்ளது.

மதுரை கான்பாளையம் பகுதியில் நடைபெற்ற இத்திருமண விழாவில் பங்கேற்றவர்கள் மொய்பணம் செலுத்தும் விதமாக ஆன்லைன் பணபரிமாற்ற செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவற்றில் மணமக்களின் தொலைபேசி எண்ணோடு அடங்கிய போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் கலந்து கொள்ளாதவர்கள் பணம் செலுத்தும் விதமாக திருமண அழைப்பிதழ்களில் இத்தகைய ஆன்லைன் பணபரிமாற்ற செயலிகள் அதன் பார் கோடுகள் இணைக்கப்பட்டிருந்தது. மணமக்களின் இத்தகைய செயல்கள் அனைவராலும் விரும்பப்பட்டு தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here