#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – மழையினால் போட்டி நிறுத்தம்! 276 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி!!

0

இந்தியாவிற்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா அணி 276 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது அங்கு மழை பெய்வதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4வது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சற்று திணறி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த அணியின் பேட்ஸ்மேன் ஸ்மித் மட்டுமே அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மழையினால் ஆட்டம் பாதிப்பு:

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார். முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய மார்னஸ் இந்த இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார். ஹாரிஸ் 38, வேட் 0, க்ரீன் 37, பெயின் 27 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளனர்.

மொய்பணம் ‘கூகுள் பே’ & ‘போன் பே’யில் – கலக்கும் புதுமண தம்பதியின் ஐடியா!!

தற்போது களத்தில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் தாகூர் தலா 3 விக்கெட்களை எடுத்துள்ளனர். சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 276 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது அங்கு மழை பெய்வதால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா – 243\7

கம்மின்ஸ் – 2*
ஸ்டார்க் – 1*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here