#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் 4 வதுநாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து திணறி வருகின்றது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடந்த 15ம் தேதி அன்று தங்களது 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட தொடங்கியது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்று தெரியவரும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிக்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 369 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்தது. இந்திய அணி சார்பில் நடராஜன், தாகூர் மற்றும் சுந்தர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரோஹித் சர்மா 44 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார். அதன்பிறகு வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 300 ரன்களை தாண்டுமா என்று இருந்த நிலையில் இந்திய அணியின் பவுலர்கள் சுந்தர் மற்றும் தாகூர் அபாரமாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். சுந்தர் 62, தாகூர் 67 ரன்களை எடுத்துள்ளனர். முடிவில் இந்திய அணி 336 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹெஸில்வுட் 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ரசிகர்களை தன் அழகினால் கட்டிப்போடும் அம்ரிதா ஐயர் – வைரலாகும் புகைப்படங்கள்!!

6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா:

அதன்பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியா அணி தனது 6 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்களை எடுத்துள்ளார். தற்போது கம்மின்ஸ் மற்றும் பெயின் களத்தில் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா – 230\6

கம்மின்ஸ் -2
பெயின் -15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here