பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்றி தழுவும் போட்டி – தேனியில் ஆச்சர்ய நிகழ்வு!!

0

ஜல்லிக்கட்டு போட்டியை போலவே தேனியில் பன்றி தழுவும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி அந்த பகுதியில் உள்ள வன வேங்கைகள் கட்சி சார்பாக நடத்தப்பட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தேனி:

விவசாயத்திற்கு முக்கியமாக பயன்படுவது காளை மாடுகள் தான் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் விவசாயம் செய்வதற்கு பன்றிகள் உதவிகரமாக இருந்துள்ளன. இதனை உணர்த்தும் வகையில் புறநானூற்றில் பாடாண் தினை பகுதி இடம்பெற்றுள்ளது. தற்போது பன்றிகளை பெருமைபடுத்தும் வகையில் ஓர் அறிய சம்பவம் தேனியில் நடந்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு போட்டி தான் அனைவரின் நினைவுக்கு வரும். தற்போது இதனை மாற்றும் வகையில் தேனியில் பன்றி தழுவும் போட்டி நடைபெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பன்றி தழுவும் போட்டி:

தேனியில் உள்ள அல்லிநகர் பகுதியில் குறமகள் வள்ளநகர் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்குள்ள வன வேங்கைகள் கட்சி சார்பாக பன்றிகளை போற்றும் வகையில் பன்றி தழுவும் போட்டி நடத்தியுள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியின் விதிமுறை என்னவென்றால் வாடிவாசல் போலவே பன்றிகள் ஓர் கோட்டிற்கு முன்பு நிற்கவைப்பர். மேலும் பன்றிகள் களத்தை விட்டு வெளியேறாத வண்ணம் சுற்றி தடுப்பு அமைத்திருப்பார். பன்றியின் எடை சுமார் 70 முதல் 100 கிலோ வரை இருக்க வேண்டும். மேலும் பன்றிகளை பிடிப்பதற்காக களத்தில் 3 வீரர்கள் தயாராக இருப்பார்.

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

தொடக்க கோட்டில் இருந்து மூன்று அடியை தாண்டிய பின்பு வீரர்கள் பன்றியை பிடிக்க வேண்டும். பன்றிகள் கோட்டை அடைய விடமால் பின்னங்காலாய் பிடித்து நிறுத்த வேண்டும். குறிப்பாக பன்றியை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். பன்றி அந்த கோட்டை தாண்டி விட்டால் பன்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பர். இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை 12 பன்றிகள் கலந்து கொண்டன. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற பன்றிகள் மற்றும் வீரர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த போட்டி நடத்தப்படும் என்று அந்த கட்சியின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here