தடுப்பூசி குறித்த சர்ச்சை பேச்சு – நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்!!

0

தமிழ் திரைஉலகின் சின்னக்கலைவாணர் விவேக் அவர்கள் மருத்துவமனையில் இருந்த பொழுது நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து மிக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்சூர் அலிகான்

தமிழ் உலகில் சமூக கருத்துக்களை கொண்டு நகைச்சுவை செய்தவர் தான் சின்னக்கலைவாணர் விவேக். இவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். பின்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவமனையில் விவேக் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பொழுது அவரது நண்பரும் சக நடிகருமான மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து பல சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மன்சூர் அலிகான் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மனு வழங்கியிருந்தார். ஆனால் அதில் பிழை இருப்பதாக கூறி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து மறு மனுவை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அஸ்வின் – வைரலாகும் ரிகர்சல் புகைப்படம்!!

இந்நிலையில் இரண்டாவது முறையாக தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கூறி மனு வழங்கினார் மன்சூர் அலிகான். தற்போது மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது, பதற்ற நிலையை உருவாக்கக்கூடாது என்று நீதிபதி தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.2 லட்சத்தை சுகாதார செயலர் பெயரில் டி.டி.யாக செலுத்த மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here