18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி – ஒரே நாளிலேயே 1.23 கோடி தாண்டிய முன்பதிவு!!

0

இந்தியாவில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.

தடுப்பூசி முன்பதிவு:

நாட்டில் மக்களிடையே பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றினை குறைப்பதற்காக அனைத்து வகை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றினை விரட்டுவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாட்டின் அனைத்து மாநிலத்திலும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் அனைத்து மாநிலத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. ஆன்லைன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பல பிரச்சனைகள் இருந்தது. பின்பு கோவின் இணைத்தளமே செயல்படாமல் இருந்தது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

பின்பு அது வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இது குறித்து மத்திய அரசு கூறியதாவது, பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், 1.5 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதல் நாளிலே முன்பதிவு சுமார் 1.23 கோடியை தாண்டியுள்ளதாம். முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் தேதி, இடம், நேரம் குறித்த பட்டியல் தயாரித்த பின்பு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here