Tuesday, May 18, 2021

“பிக் பாஸ்” ஆரிக்கு அடித்த லாட்டரி – குவிந்து வரும் வாழ்த்துக்கள்!!

Must Read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஆரி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஆரி

தமிழ் சினிமாவில் நடிகர் ஆரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமானார். இவர் முதன் முதலாக “ரெட்டை சூழி” என்ற திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருப்பார். பின், ஆரி தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தும், இவர் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய நடிகராக வலம் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

தடுப்பூசி குறித்த சர்ச்சை பேச்சு – நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்!!

இவர் ஒரு நடிகர் மட்டும் அல்ல பல முன்னணி நடிகர்களுக்கு ஜிம் கோச்சாகவும் இருந்துள்ளார். அதே போல் ஆரி பல கின்னஸ் சாதனையும் செய்துள்ளார். இப்படியாக இருக்க, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயரினை ஆரி சம்பாரித்தார். இப்படியாக இருக்க, ஆரி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு முக்கிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹிந்தியில் “ஆர்டிகிள் 15” என்ற திரைப்படத்தினை தான் தமிழில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். இந்த திரைப்படத்தினை இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். ஆரிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களை பீதி அடைய செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: தற்போது கச்சா எண்ணெயின் பீபாய் விலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -