பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அஸ்வின் – வைரலாகும் ரிகர்சல் புகைப்படம்!!

0

விஜய் டிவி தற்போது பல தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களை ஆரம்பித்து வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் சஸ்பென்ஸ் அளிக்கும் விதத்தில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி அஸ்வின் சான்ஸ் ஆட உள்ளார். அதற்கான ரிகர்சல் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஸ்வின்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக பிரபலமடைந்து வருவது யார் என்று பார்த்தால் அதில் அஸ்வினும் ஒருவராக தான் இருப்பார். ஆரம்பத்தில் இருந்து பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கோயம்புத்தூரில் இருந்து யாரையும் தெரியாமல் எப்படியும் சாதித்து விடலாம் என்று வந்தவர் தான் அஸ்வின். விஜய் டிவியில் 2 சீரியல்களில் நடித்திருந்தார் அஸ்வின்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது கூட அவருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு தற்போது வரை பக்கபலமாக இருந்து வருகிறது. அவர் யார் என்பதை மக்களுக்கு பறைசாற்றியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதுவும் அவரது மச்சான் புகழுடன் இணைந்து நடிக்க உள்ளார். இப்படி கொடிகட்டி பறக்க தொடங்கிய அஸ்வின் பல விளம்பரங்களிலும் நடித்து கொண்டு தான் உள்ளார்.

ரவுடி கெட்டப்பில் அலற விட்ட “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – சும்மா மிரட்டிட்டீங்க போங்க!!

ஜீ தமிழில் கிரிக்கெட் லீக் விளம்பரத்தில் கூட நடித்து வந்தார். மேலும் பல ஆல்பம் சாங்கிலும் நடித்து வருகிறார் அஸ்வின். அப்படி இருக்க அவர் டான்ஸ் ரிகர்சல் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தான் நடக்கவுள்ளது. அதாங்க, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள நிலையில் அவர் கெஸ்டாக டான்ஸ் ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ஞாயிற்று கிழமைக்காக காத்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here