யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகலாம் – மம்தா பானர்ஜி அதிரடி கருத்து!!

0

தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமூல் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். சில தினங்களாக திரிணாமூல் கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திரிணாமூல்:

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கு வங்கத்தில் அரசியல் நிலை மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. காரணம் திடீர் சுற்றுப்பயணமாக பாஜகவின் முன்னணி தலைவர் அமித்ஷா மேற்குவங்கத்திற்கு 3 நாள் பயணமாக வந்தார். அதுமட்டுமல்லாமல் திரிணாமூல் கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்சியின் மற்றொரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மேற்குவங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரத்தன் சுக்லா தந்து பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ராஜினாமா செய்துள்ளார். தற்போது இதனை குறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “யார் வேண்டுமானாலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம்” என்று அதிரடியாக பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸில் Ticket To Finale யாருக்கு?? தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரியோ!!

மேலும் ரத்தன்சுக்லா தனது ராஜினாமா கடிதத்தில் கூறியதாவது, அவர் விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதனை யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய இவர் எம்.எல்.ஏ வாக தொடர்ந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுக்லாவின் பதவி விலகளுக்கு காரணம் இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. மேலும் இவர் தொடர்ந்து திரிணாமூல் கட்சியில் நீடிப்பார் என்று அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here