மம்தா பானர்ஜியை கொலை வெறியுடன் தாக்கிய மர்ம நபர்கள் – மருத்துவமனையில் அனுமதி!!

0

தேர்தல் பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாதா சில மர்ம நபர்கள் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது மம்தாவிற்கு எலும்பு முறிவு, நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறார்.

மம்தா பானர்ஜி:

மேற்கு வங்கத்தில் இந்த மாதம் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே ஆளும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள் பலர் விலகி பாஜகவில் இணைந்து வந்தனர். இதனால் இந்த தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நடைபெறும் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் வரப்போகிற தேர்தலில் மம்தா நந்திகிராம் பகுதியில் போட்டியிடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்காக அவர் நேற்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவர் நேற்று மாலை ரியாபார பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார். அங்கிருந்த கோவிலுக்கு வெளியே உள்ள காரின் அருகே நின்று கொண்டிருந்த மமதாவை அடையாளம் தெரியாத 5 குண்டர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயங்கள் அவருக்கு ஏற்பட்டது. பின்பு பாதுகாவலர்கள் அவரை தூக்கி கொண்டு காரில் ஏற்றினர். அப்போது பேட்டியளித்த மம்தா, 4,5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை கார் கதவை நோக்கி தள்ளினர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தாக்குதல் சமயத்தில் அங்கு ஒரு காவலர் கூட இல்லை. இது திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டினார். பின்பு இவர் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 பேர் கொண்ட தலைமை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மம்தா தற்போது நெஞ்சுவலி, மூச்சு திணறல், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மம்தா தாக்குதல் குறித்த முழு அறிக்கையை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த சம்பத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here